×

வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை பாதுகாக்க வேண்டும்

தூத்துக்குடி, மே 10: வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசுகளான வீமராஜா, வீரசக்கம்மாள்,  இந்துமதி உள்ளிட்டோர் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு:  பாஞ்சாலங்குறிச்சியில் தொல்லியல் துறை கட்டுபாட்டிலுள்ள வீரபாண்டிய  கட்டபொம்மன் நினைவு கோட்டையின் பழைய பாரம்பரிய நினைவு சின்னங்களை அழித்து  சேதப்படுத்துவது என்ற ரீதியில் விதிமுறைகளை மீறி சில சம்பவங்கள் நடந்து  வருகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர் வீரசக்கதேவி  அம்மன் கோயில் பெயரை சொல்லி பொதுமக்களிடம் இருந்து அரசு அனுமதியின்றி குழு  அமைத்து கொண்டு கட்டாய வரி வசூல் செய்து வருகிறார். வசூல் தொகைக்கு எந்த ஒரு முறையான வரவு செலவு கணக்கும் அரசுக்கு காட்டப்படவில்லை. பணம் வசூலில் ஈடுபட்டு வரும் இந்த தனிக்குழுவை உடனடியாக  கலைப்பதோடு, கோட்டையில் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படுவதில் இருந்தும்  பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Veerapandiya Kattabomman ,
× RELATED பெருங்குடியில் உடைப்பு ஏற்பட்ட...